விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒன்றையர் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதல் நிலை வீரர் நோவக் ஜோகோவிச், 10ஆம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே நட்சத்திர வீரர் ஜோகோவிச்சிற்கு இளம் வீரர் ஷபோவலோ கடும் போட்டி கொடுத்தார். முதல் செட் 6-6 என சமநிலையில் முடிந்த நிலையில் டை பிரேக்கரில் ஜோகோவிச் வெற்றி பெற்று முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றினார்.