தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: ஃபோக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய நடால்! - கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றியர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு உலகின் முன்னணி வீரரான ரஃபேல் நடால் முன்னேறியுள்ளார்.

Watch | Australian Open: Rafael Nadal beats Fabio Fognini to reach quarter-finals
Watch | Australian Open: Rafael Nadal beats Fabio Fognini to reach quarter-finals

By

Published : Feb 15, 2021, 2:50 PM IST

மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டையும், 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி ஃபோக்னினிக்கு அதிர்ச்சியளித்தார்.

ரஃபேல் நடால்

அதன்பின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாம் செட் ஆட்டத்திலும் அசத்திய நடால் 6-4 என்ற கணக்கில் அதனையும் கைப்பற்றினார். இதன் மூலம் ரஃபேல் நடால் 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஃபோக்னினியை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: சர்ச்சை வழக்கில் சிக்கிய யுவராஜ்: 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details