அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான புவெனோய் அயர்ஸில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நகல் - ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில் தொடக்கத்திலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுமித் நகல் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஆல்பர்ட் ராமோஸிற்கு அதிர்ச்சிகொடுத்தார்.
பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய ஆல்பர்ட் 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தன்வசப்படுத்தினார். இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற விறுவிறுப்பில் மூன்றாம் செட்டிற்கான ஆட்டம் நடைபெற்றது.