டென்னிஸ் விளையாட்டின் மிகப் பிரபலமான உள்ளரங்குத் தொடரான வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது.
ஆடவருக்கான இத்தொடரின் முதல் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், சக நாட்டவரான பிலிப் க்ராஜினோவிச்சை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் க்ராஜினோவிச்சை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.