சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பால் ஆண்டுதோறும் ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடத்தப்படுகிறது. இதில் டேவிஸ் கோப்பை ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது ஸ்பெயினில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் ஆறு பிரிவுகளில் 18 அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் - வெற்றிபெற்றும் வெளியேறிய அமெரிக்கா - USA in Davis cup
மாட்ரிட்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற போதிலும், அமெரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது.
இதில் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, இத்தாலி ஆகிய அணிகளின் இரட்டையர் வீரர்களுக்களுக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்க இணையான சாம் குவெர்ரே, ஜாக் சாக் ஆகியோர் இத்தாலியின் சிமோன் பொலேலி - பேபியோ பாக்னேனி இணையை 7-6, 6-7, 6-4 என்ற செட்கணக்கில் தோற்கடித்தது. இருப்பினும் அமெரிக்க அணி இந்தத் தொடரிலிருந்து வெளியேறியது.
ஏனெனில் காலிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஒரு செட்டையும் இழக்கக்கூடாது என்ற நிலையில் நேற்றையப் போட்டியில் அமெரிக்கா களமிறங்கியது. ஆனால் நேற்றையப் போட்டியில் அமெரிக்க இணை ஒரு செட்டை இழந்திருந்ததால் அமெரிக்க அணி காலிறுதி வாய்ப்பை இழந்தது. இந்தப் போட்டி ஸ்பெயினின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.04 மணி வரை நடைபெற்றது. இதுவே டேவிஸ் கோப்பை வரலாற்றில் காலதாமதமாக நிறைவடைந்த போட்டியாகும்.