தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யுஎஸ் ஓபன்: சாதனை படைத்த சுமித் நகல்! - சாதனை படைத்த சுமித் நகல்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் தொடரில் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளார் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நகல்.

Sumit Nagal
இந்திய டென்னீஸ் வீரர் சுமித் நகல்

By

Published : Sep 2, 2020, 10:12 AM IST

யுஎஸ் வீரர் பிராட்லி கிளானை 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் முதல் சுற்றில் வீழ்த்தியுள்ளார் இந்திய வீரர் சுமித் நகல். இதன்மூலம் 23 வயது இளம் வீரரான நகல், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர் என்று பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக, கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் ஆகிய மூன்று தொடர்களிலும், இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் இரண்டாம் சுற்று வரை சென்றார். இதைத்தொடர்ந்து, கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரில் சுமித் நகல் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் சுற்று சென்றுள்ளார்.

6-1, 6-3 என முதல் இரண்டு செட்களில் முன்னிலை வகித்த நகல், மூன்றாவது செட்டில் 3-6 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்து, நான்காவது செட்டில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த நகல் 6-1 என்ற கணக்கில் கிளானை வீழ்த்தினார். உலகளவில் 122 ரேங்கிங்கிலுள்ள நகல், தனது இரண்டாவது சுற்றில் ஆஸ்திரியாவின் டோமினிக் தீம் அல்லது ஸ்பெயினின் ஜோம் முனார் ஆகிய இருவரில் ஒருவரை எதிர்கொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க: சிக்கலில் சிக்கும் சிஸ்கே...! மற்றொரு வீரரும் விலகலா?

ABOUT THE AUTHOR

...view details