தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யூ.எஸ். ஓபன்: அரையிறுதி வாய்ப்பை இழந்த போபண்ணா இணை! - ரோகன் போபண்ணா

நியூயார்க்: யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் ரோகன் போபண்ணா - டெனிஸ் ஷபோவாலோ இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

US Open: Indian challenge ends as Bopanna-Shapovalov knocked out in QF
US Open: Indian challenge ends as Bopanna-Shapovalov knocked out in QF

By

Published : Sep 8, 2020, 2:14 PM IST

யூ.எஸ். ஓபன் 2020 டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (செப். 08) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவாலோ இணை ரஷ்யாவின் ஜீன்-ஜூலியன் ரோஜர் இணையை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜீன்-ஜூலியன் ரோஜர் இணை சிறப்பாக விளையாடி முதல் செட் கணக்கை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி, போபண்ணா இணைக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் ஜீன்-ஜூலியன் ரோஜர் இணை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதன்மூலம் யூ.எஸ். ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ரஷ்யாவின் ஜீன் - ஜூலியன் ரோஜர் இணை 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ரோகன் போபண்ணா இணையை வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இத்தோல்வியின் மூலம் இந்தியாவின் ரோகன் போபண்ணா - கனடாவின் டெனிஸ் ஷபோவாலோ இணை யூ.எஸ். ஓபன் தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க:டெஸ்ட் அணிக்கு திரும்பும் நம்பிக்கை உள்ளது - ஷிகர் தவான்!

ABOUT THE AUTHOR

...view details