அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யூ.எஸ். ஓபன் 2020 டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (செப்.11) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிரடி காட்டிய செரீனா முதல் செட் கணக்கை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். பின்னர் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கிய அஸரென்கா இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி செரீனாவிற்கு அதிர்ச்சியளித்தார்.