2021 பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டம் நேற்று (மே 12) நடைபெற்றது. இதில், ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவுடன் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா மோதினார்.
இப்போட்டியில தரவரிசை பட்டியலில் 33ஆவது இடத்தில் உள்ள கிரெஜ்சிகோவா 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். கிரெஜ்சிகோவா வெல்லும் முதல் கிராண்ட ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
இரட்டையரிலும் பட்டம் வென்றார்
ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற அடுத்த நாளே, தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்தில் கிரெஜ்சிகோவா களம் கண்டார். மகளிர் இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்தில், பார்போரா கிரெஜ்சிகோவா மற்றும் கேட்ரீனா சினிகோவா இணை, இகா ஸ்வீடெக் மற்றும் பெத்தனி மாட்டேக் இணையை எதிர்கொண்டது.