தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியா வீராங்கனையுடன் ஹெலிகாப்டரில் பறந்த ஜப்பான் வீராங்கனை - பிரிஸ்பேன் இண்டர்நேஷனல்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கவுள்ள நிலையில், ஜப்பான் வீராங்கனை ஒசாகா ஆஸ்திரேலியா ஃபெட் கப் வீராங்கனை கிம் உடன் ஹெலிகாப்டரில் பிரிஸ்பேனை சுற்றிப்பார்த்துள்ளார்.

two-time-slam-champion-osaka-takes-helicopter-flight-over-brisbane
two-time-slam-champion-osaka-takes-helicopter-flight-over-brisbane

By

Published : Jan 3, 2020, 7:52 AM IST

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளது. அதில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்கவுள்ளார்.

இந்தத் தொடர் சில நாள்களில் நடக்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஃபெட் கப் வீராங்கனையான கிம் பிர்ரலுடன் (kim Birrell) ஹெலிகாப்டரில் பிரிஸ்பேனை சுற்றிப் பார்த்துள்ளார். 22 வயதாகும் நவோமி ஒசாகா கடந்த முறை பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.

ஆஸ்திரேலியா வீராங்கனையுடன் ஹெலிகாப்டரில் பறந்த ஜப்பான் வீராங்கனை

கடந்தாண்டு முதலிடத்திலிருந்த நவோமி ஒசாகா, ஆஷ்லி பார்ட்டியின் எழுச்சிக்குப் பிறகு மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டார். இதுகுறித்து ஒசாகா பேசுகையில், ஆஷ்லி மிகச்சிறந்த வீராங்கனை என்பதால்தான் அவர் முதலிடத்தில் உள்ளார் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: டென்னிஸில் மூவரின் ஆதிக்கத்தையும் முடிவுக்கு கொண்டுவருவேன்: சிட்சிபாஸ்!

ABOUT THE AUTHOR

...view details