RolexParisMasters: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் இளம் நட்சத்திர வீரர் பெரெட்டினி பிரான்சின் வில்பிரைட் சோங்காவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அதிரடியை வெளிப்படுத்திய சோங்கா, முதல் செட் கணக்கை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி பெரெட்டினிக்கு அதிர்ச்சியளித்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டுக்கான ஆட்டத்திலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோங்கா, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி பெரெட்டினியை வீழ்த்தினார்.
வில்பிரைட் சோங்கா - பெரெட்டினி இதன்மூலம், பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் சோங்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் பெரெட்டினியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிவுள்ளார்.
இதையும் படிங்க:#RolexParisMasters: மெத்வதேவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட சார்டி!