மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ நகரில் இந்தாண்டுக்கான மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் 33 வயதான ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், சக நாட்டைச் சேர்ந்த பாப்லோ அன்ஜூருடன் மோதினார்.
இரண்டாம் சுற்றில் நடால்! - மெக்சிகன் ஓபன் 2020
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
top-seed-nadal-moves-to-second-round-in-mexican-open
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லாவகமாக வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள இரண்டாம் சுற்றுப் போட்டியில் செர்பியாவின் மியோமிர் கெம்மானோவிக்குடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
இதையும் படிங்க:டென்னிஸ்க்கு 'குட்பை' சொன்ன மரியா ஷரபோவா!