பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்கான ரியோ ஓபன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது காலிறுதி போட்டியில் குரோவியாவின் போர்னா கொரிக், இத்தாலி நாட்டைச் சேர்ந்த லொரன்சோ சொனேகாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கொரிக் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில், ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டாமினிக் தீம், இத்தாலியின் ஜியான்லுகா மேகருடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், முதல் செட்டை ஜியான்லுகா மேகர் 7-6 என்ற கணக்கில் டைபிரேக்கர் முறையில் வென்றார்.