இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆடவர்களுக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்துள்ள டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும் இந்தத் தொடரில் வீரர்கள் இரு பிரிவுகளாகப் பங்குபெற்றுள்ளனர்.
இதனிடையே இன்று ஆண்ட்ரே அகாஸி குரூப்பில் நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவின் டெனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வெரவ் 6-4 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.