டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஏடிபி வெளியிட்டுள்ளது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பட்டியலில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்து 269ஆவது வாரமாக 9865 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து, ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் 9225 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 7130 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
தரவரிசைப் பட்டியலில் கெத்துக் காட்டிய சுமித் நகல் - ATP Tennis Rankings
டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சுமித் நகல் 139ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
Sumit Nagal
இப்பட்டியலில், 174ஆவது இடத்திலிருந்த இந்திய வீரர் சுமித் நகல் தற்போது 15 இடங்கள் முன்னேறி 159ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சா லுகா சேலஞ்சர் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்தார். முன்னதாக, நியூயார்க்கில் நடைபெற்ற யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இவர் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ஃபெடரரை எதிர்த்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.