டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவின் சென்ஷைன் நகரில் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா ஆடினார்.
இதன் முதல் செட் ஆட்டத்தில் கரோலினா அதிரடியாக ஆட இதனை எதிர்பார்த்திராத ஆஷ்லி பார்ட்டி சற்று தடுமாறினார். இதனால் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் கரோலினா கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் போட்டியில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லி 6-2 என கைப்பற்ற, ஆட்டம் பரபரப்பானது. இறுதியாக வெற்றியாளர் யார் என தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டம் நடைபெற்றது. இந்த செட்டில் தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய ஆஷ்லி, எளிதாக புள்ளிகளைப் பெற்றார். இறுதியாக 6-3 என்ற கணக்கில் மூன்றாவது செட்டைக் கைப்பற்றி, டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்றார்.
இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து உக்ரேனிய வீராங்கனை ஸ்விட்டோலினா ஆடவுள்ளார்.
இதையும் படிங்க: டிமிட்ரோவை வீழ்த்தி ஆறாவது முறையாக ஜோகோவிச் இறுதிச்சுற்றுக்கு தகுதி!