தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

துபாய் ஓபன்: 3ஆவது சுற்றில் கோகோ கஃப், தொடரிலிருந்து வெளியேறிய ஸ்விட்டோலினா! - எலினா ஸ்விட்டோலினா

துபாய் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனை கோகோ கஃப் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Svitolina, Kiki, Kvitova out of Dubai Open; Coco Gauff progresses to 3rd round
Svitolina, Kiki, Kvitova out of Dubai Open; Coco Gauff progresses to 3rd round

By

Published : Mar 10, 2021, 4:05 PM IST

மகளிருக்கான துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ கஃப், சிலி நாட்டின் மார்கெட்டா வொண்ட்ரூசோவாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் மார்கெட்டா கைப்பற்ற, அதன்பின் சுதாரித்துக்கொண்டு விளையாடிய கோகோ கஃப் இரண்டாவது செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

அதன்பின் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டியிலும் அதிரடியாக விளையாடிய கஃப் 6-4 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி மார்கெட்டாவிற்கு அதிர்ச்சியளித்தார்.

இதன்மூலம் கோகோ கஃப் 3-6, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் மார்கெட்டா வொண்ட்ரூசோவாவை வீழ்த்தி துபாய் ஓபன் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு இரண்டாம் சுற்று போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா 6-2, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து டி20 தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி நீக்கம்?

ABOUT THE AUTHOR

...view details