தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன் தொடருக்கான வைல்ட் கார்டை பெற்ற சுமித் நகல்! - சுமித் நகல்

2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான 'வைல்ட் கார்டு என்ட்ரீ' இந்தியாவின் சுமித் நகலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Sumit Nagal receives wildcard for Australian Open 2021
Sumit Nagal receives wildcard for Australian Open 2021

By

Published : Dec 29, 2020, 8:41 AM IST

2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் பிப்ரவரி 08ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மெல்போர்னில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான ‘வைல்ட் கார்டு என்ட்ரீ’ இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் சுமித் நகலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் மெயின்-டிரா வைல்டு கார்டுக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டாரியா கவ்ரிலோவா, அஸ்ட்ரா ஷர்மா, கிறிஸ்டோபர் ஓ'கோனெல், மேடிசன் இங்கிலிஸ், லிசெட் கப்ரேரா, மார்க் போல்மன்ஸ் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

இது குறித்து பேசிய சுமித் நகல், "2021 ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடருக்கான வைல்ட் கார்டை பெற எனக்கு உதவி செய்த அனைவருக்கும், ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பிற்கும் எனது நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரேவுக்கு, 2021ஆம் ஆண்டிற்கான ஆச்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் வைல்ட் கார்டு என்ட்ரீ வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபனிலிருந்து ஃபெடரர் விலகல்?

ABOUT THE AUTHOR

...view details