மகளிருக்கான புனித பீட்டர்ஸ்பெர்க் டிராபிக்கான டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கை எதிர்த்து ரஷ்யாவின் ஸ்வெட்லனா ஆடினார்.
இதன் முதல் சுற்றில் இரு வீராங்கனைகளும் சரிக்கு சமமாக ஆடியதால் ஆட்டம் டை - ப்ரேக்கர் வரை சென்றது. டை ப்ரேக்கரை 7-4 என்று பெலிண்டா கைப்பற்றி 7-6 (7-4) என்ற கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார்.