ஆடவருக்கான கிராண்ட் பிரிக்ஸ் ஹாசன் ஏடிபி டென்னிஸ் தொடர் மொராக்கோவில் நடைபெற்று வருகிறது. இதில், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்சின் பெனாய்ட் ஜோடி, ஆஸ்திரேலியாவின் மெல்சர், குரோஷியாவின் ஃபிராங்கோ இணையை எதிர்கொண்டது.
டென்னிஸ்: பயஸ் இணை தோல்வி! - Leander Paes
மொராக்கோ: கிராண்ட் பிரிக்ஸ் ஹாசன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், பிரான்சின் பெனாய்ட் இணை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.
முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் லாவகமாக வென்ற பயஸ் ஜோடி, இரண்டாவது செட்டை 3-6 என தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் பரபரப்பான சூப்பர் டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில், மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிபடுத்திய பயஸ் இணை 5-10 என்ற கணக்கில் வீழ்ந்தது.
இதன் மூலம், பயஸ் ஜோடி 6-1, 3-6, 5-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம், மெல்சர், ஃபிராங்கா இணை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச் சுற்றில் நெதர்லாந்தின் மிடில்குப்(Middlekoop), டென்மார்க்கின் நைல்சென்(Nielsen) இணையுடன் மோதவுள்ளது.