தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தந்தை மரணத்தினால் தொடரிலிருந்து விலகிய அகுட்! - ஸ்பேயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான பாடிஸ்டா அகுட்

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான பாடிஸ்டா அகுட் தனது தந்தை இறந்த காரணத்தினால் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Agut out of Davis Cup

By

Published : Nov 22, 2019, 1:35 PM IST

உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருப்பவர் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் பாடிஸ்டா அகுட். இவர் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அகுட்டின் தந்தை ஜோவாகின் பாடிஸ்டா சாலை விபத்தில் உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த அகுட் தனது தந்தையின் இறுதி சடங்கிற்காக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தற்போது இத்தகவலை அறிந்த டென்னிஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாடிஸ்டா அகுட்டிற்கு அறுதல் கூறிவருகின்றனர். மேலும் அவர் தந்தையின் மரணத்திற்காக அவர் விளையாடிவரும் ராயல் ஸ்பேனிஷ் டென்னிஸ் கூட்டமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: NZ VS ENG 2019: ஸ்டோக்ஸ், பட்லர் அதிரடியால் வலுவான நிலையில் இங்கிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details