தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டேவிஸ் கோப்பை - பிரிட்டனை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின்! - ஸ்பெயின் அணி இன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் கனடா அணியை எதிர்கொள்ளவுள்ளது

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில் ரஃபேல் நடால் தலைமையிலான ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில்  டேன் எவன்ஸ் தலைமையிலான பிரிட்டன் அணியை வீழ்த்தி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

Davis Cup

By

Published : Nov 24, 2019, 12:35 PM IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், பப்லோ கரெனோ, மார்செல் கிரானோலர்ஸ் அடங்கிய அணி, பிரிட்டனின் டேன் எவன்ஸ், கெய்ல் எட்மண்ட், ஜேமி முர்ரே அடங்கிய அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் பிரிட்டனின் கெய்ல் எட்மண்ட், ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸை எதிர் கொண்டார். இந்த போட்டியில் எட்மண்ட் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் லோபஸை வீழ்த்தி, பிரிட்டன் அணிக்கு வெற்றியைப் பெற்று தந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் பிரிட்டனின் டேன் எவன்ஸை வீழ்த்தி ஸ்பெயின் அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.

பின் வெற்றியைத் தீர்மானிக்க நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயினின் நடால், லோபஸ் இணை, பிரிட்டனின் ஜெமி முர்ரே, நீல் ஸ்கப்ஸ்கி இணையை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் நடால் இணை 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் பிரிட்டனின் ஜெமி முர்ரே இணையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் டேவிஸ் கோப்பை அரையிறுதிச்சுற்றில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் மூலம் ஸ்பெயின் அணி இன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் கனடா அணியை எதிர் கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டேவிஸ் கோப்பை: காயம் காரணமாக வெளியேறிய மற்றொரு இந்திய வீரர்!

ABOUT THE AUTHOR

...view details