தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலிய ஓபன் : முகுருசாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கெனின்! - அமெரிக்காவின் சோஃபியா கெனின்

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் சோஃபியா கெனின் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.

Sofia Kenin becomes youngest Australian Open champion
Sofia Kenin becomes youngest Australian Open champion

By

Published : Feb 1, 2020, 11:42 PM IST

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் சோஃபியா கெனின், ஸ்பெய்னின் கார்பைன் முகுருசாவை எதிர்கொண்டார்.

இந்தப்போட்டியின் தொடக்கத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முகுருசா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி சோஃபியாவிற்கு அதிர்ச்சியளித்தார்.

இதனையடுத்து தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய சோஃபியா இரண்டாவது, மூன்றாவது செட்டை 6-2, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி முகுருசாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இதன் மூலம் இளம் வயதில் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டத்தை வென்ற இரண்டாவது வீரங்கனை என்ற சாதனையை அமெரிக்காவின் சோஃபியா கெனின் படைத்துள்ளார்.

முகுருசாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கெனின்

இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா தனது 20ஆவது வயதில் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: 2ஆவது முறையாக வாகை சூடிய பபூஸ் - கிறிஸ்டினா இணை

ABOUT THE AUTHOR

...view details