நியூயார்க்கில் நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ். ஓபன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனயான செரினா வில்லியம்ஸ், சீனாவின் வாங் க்யூாங் உடன் மோதினார்.
யு.எஸ் ஓபனில் சதம் விளாசிய செரினா வில்லியம்ஸ்! - US open Grandslam
யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் 100 வெற்றிகளை பதிவு செய்த மூன்றாவது வீராங்கனை என்ற சாதனையை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
Serena
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்திய செரினா 6-1, 6-0 என நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியின்மூலம், அவர் யு.எஸ் ஓபன் தொடரில் 100 வெற்றிகளை பதிவு செய்த மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா, கிறிஸ் எவர்ட் ஆகியோர் இச்சாதனையைப் படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.