விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சக நாட்டைச் சேர்ந்த அலிசன் ரிஸ்கேவை எதிர்கொண்டார்.
விருவிருப்பான ஆட்டத்தில் 6-4 என்ற நேர் செட்கணக்கில் ரிஸ்கேவை வீழ்த்தினார். அதன் பின் அடிய இரண்டாவது செட்டில் 4-6 என்ற நேர் செட்களில் இரண்டாவது செட் கணக்கை இழந்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் 12 ஆவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார் செரினா வில்லியம்ஸ். பின்னர் தனது சுய ஆட்டத்தை வெளிபடுத்திய செரினா, இறுதிச் சுற்றை 6-3 என கைப்பற்றி அலிசன் ரிஸ்கேவை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 12ஆவது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிவுள்ளார் செரினா வில்லியம்ஸ்.
உலக மகளிர் ஒற்றையர் பிரிவு பெண்கள் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது அதிக ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.