வரலாற்றுச் சிறப்புமிக்க யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனைகளான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் ரஷ்யாவின் மரியா ஷரபோவா மோதினர்.
ஆட்டம் தொடங்கியது முதலே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய செரினா முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தினார்.
அதன்பின் இரண்டாவது செட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செரினா, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தினார்.
இதன்மூலம் செரினா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்கணக்கில் மரியா ஷரபோவாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
செரினா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா ஆகிய இருவரும் முதன்முறையாக யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.