கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரானது அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று (செப்.2) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் உலக நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கிறிஸ்டி அஹ்ன்னை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய செரீனா, முதல் செட் கணக்கை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி கிறிஸ்டிக்கு அதிர்ச்சியளித்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தையும் செரீனா வில்லியம்ஸ் 3-6 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.