2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல அதிர்ச்சிகரமான ஆட்டங்களும், திருப்புமுனைகளும் நடைபெற்றுவருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்த்து சகநாட்டு வீராங்கனையான சோஃபியா கெனின் மோதினார்.
பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்! - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சோஃபியா கெனினிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
செரீனா வில்லியம்ஸ்
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை கெனின் 6-2 எனக் கைப்பற்றி செரீனாவுக்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டை 7-5 என கெனின் கைப்பற்ற, செரீனாவின் பிரெஞ்சு ஓபன் கனவு தகர்ந்தது.
செரீனாவை வீழ்த்திய அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனின் நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.