2019ஆம் ஆண்டுக்கான ரோஜர்ஸ் (ROGERS CUP) கோப்பை டென்னிஸ் தொடர் டொரன்ட்டோவில் நடைபெற்றுவருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்த்து பெல்ஜிய வீராங்கனை எலீஸ் மெர்டன்ஸ் மோதினார்.
ரோஜர்ஸ் கோப்பை: மூன்றாவது சுற்றில் செரீனா! - ரோகர்ஸ் டென்னிஸ்
டொரன்ட்டோ: ரோஜர்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று போட்டியில் பெல்ஜிய வீராங்கனை எலீஸ் மெர்டன்ஸை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய செரீனா வில்லியம்ஸ், முதல் செட்டை 6-3 என கைபற்றி அசத்தினார். இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் எலீஸ் மெர்டன்ஸின் ஆட்டம் அனுபவம் வாய்ந்த செரீனாவிடம் எடுபடவில்லை. இதனையடுத்து தனது அதிரடியான ஆட்டத்தால் இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதிபெற்றார்.
விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் சிமோனா ஹெலப்பிடம் தோல்வியடைந்ததை அடுத்து, ரோஜர்ஸ் தொடரில் பங்கேற்றுள்ளதால் செரீனா வில்லியம்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.