தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எமிலியா - ரோமாக்னா ஓபன்: இரண்டாம் சுற்றில் செரீனா தோல்வி! - டென்னிஸ் செய்திகள்

நேற்று (மே.18) நடைபெற்ற எமிலியா ரோமாக்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று போட்டியில், கேத்தரினா சினியகோவா 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தினார்.

Serena Williams, செரீனா வில்லியம்ஸ், Emilia Romagna Open , எமிலியா ரோமாக்னா ஓபன்
Emilia Romagna Open

By

Published : May 19, 2021, 4:47 PM IST

ஃபார்மா (இத்தாலி): மகளிருக்கான எமிலியா - ரோமாக்னா ஓபன் டென்னிஸ் தொடர் மே 16ஆம் தேதி முதல் இத்தாலியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று (மே.18) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ், கேத்தரினா சினியாகோவா ஆகியோர் மோதினார்.

இந்தப் போட்டியின் முடிவில், கேத்தரினா சினியகோவா 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் தொடரிலிருந்து செரீனா வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் மற்றொரு போட்டியில், தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் நிலை வீராங்கனையான குரேஷியா நாட்டைச் சேர்ந்த பெட்ரா மார்டிக், ரஷ்யாவின் வர்வரா கிராச்சேவாவை எதிர்கொண்டார். அப்போட்டியில், 6-4, 6-2 என்ற செட் கணக்கில் மார்டிக் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ட்வீட் செய்து வேகமாக டெலிட் செய்த அஸ்வின்: ஏன் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details