தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அர்ஜென்டினா ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய டியாகோ ஸ்வாட்ஸ்மேன்! - ஏடிபி பியூனோஸ் ஏர்ஸ் ஆடவர் டென்னிஸ் தொடர்

அர்ஜென்டினாவில் நடைபெறும் ஏடிபி பியூனோஸ் ஏர்ஸ் ஆடவர் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேன் முன்னேறியுள்ளார்.

schwartzman-edges-delbonis-to-reach-quarter-finals-in-buenos-aires
schwartzman-edges-delbonis-to-reach-quarter-finals-in-buenos-aires

By

Published : Feb 14, 2020, 6:30 PM IST

ஏடிபி பியூனோஸ் ஏர்ஸ் ஆடவர் டென்னிஸ் தொடர் (அர்ஜென்டினா ஓபன்) பிப்.8ஆம் தொடங்கி நடந்துவருகிறது. இதன் இரண்டாவது சுற்றில் அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்த்து சகநாட்டு வீரரான ஃபெடரிக்கோ டெல்போனிஸ் ஆடினார். இதன் முதல் செட் ஆட்டத்தில் 6-3 என்ற கணக்கில் டியாகோ கைப்பற்ற, இரண்டாவது செட்டை டெல்போனிஸ் 4-6 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மூன்றாவது செட் ஆட்டமான டிசைடருக்கு ஆட்டம் நகர்ந்தது. அதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டியாகோ 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

காலிறுதி முன்னேறிய டியாகோ ஸ்வாட்ஸ்மேன்

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டியாகோ அர்ஜெண்டினாவின் பியூனோஸ் ஏர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். நாளை நடக்கவுள்ள காலிறுதிப் போட்டியில் டியாகோ உருகுவேயின் பாப்லோவை எதிர்த்து ஆடவுள்ளார்.

இதையும் படிங்க:எடையைக் குறைத்தது எப்படி... ரகசியம் சொல்லும் சானியா மிர்சா!

ABOUT THE AUTHOR

...view details