தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

துபாய் ஓபன்: தொடரிலிருந்து வெளியேறியது சானியா இணை! - சானியா மிர்சா

துபாய் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரேஜா கிளெபாஸ் இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Sania Mirza's runs end at Dubai Open
Sania Mirza's runs end at Dubai Open

By

Published : Mar 10, 2021, 8:37 PM IST

மகளிருக்கான துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரேஜா கிளெபாஸ் இணை, அமெரிக்காவின் ஹேலி கார்ட்டர்-பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி இணையுடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சானியா மிர்சா இணை தொடக்கத்திலேயே தடுமாறியது. மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கார்ட்டர் இணை அடுத்தடுத்த செட்களை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதன்மூலம் சானியா மிர்சா இணை 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கார்ட்டர் இணையிடம் தோல்வியடைந்து, துபாய் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க: துபாய் ஓபன்: 3ஆவது சுற்றில் கோகோ கஃப், தொடரிலிருந்து வெளியேறிய ஸ்விட்டோலினா!

ABOUT THE AUTHOR

...view details