தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையுடன் கம்பேக் தந்த சானியா மிர்சா - ஹோபார்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் 2020

ஹோபார்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை சானியா மிர்சா - நடியா கிச்னோக் ஜோடி வென்றுள்ளது.

Sania Mirza wins Hobart International title after her 2-year maternity break
Sania Mirza wins Hobart International title after her 2-year maternity break

By

Published : Jan 18, 2020, 12:57 PM IST

ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் மகளிருக்கான ஹோபார்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடியா கிச்னோக் ஜோடி, சீனாவின் ஷாய் பெங் - ஷாய் செங் இணையை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா மிர்சா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஷாய் பெங் - ஷாய் செங் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

33 வயதான சானியா மிர்சா குழந்தைப்பேறுக்குப் பிறகு கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் தந்துள்ளார். இவர் இறுதியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சீனா ஓபன் தொடரில் பங்கேற்றிருந்தார். சானியா மிர்சா இதுவரை மகளிர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு ஆகிய பிரிவுகளில் ஆறு கிராண்ட்ஸாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கத்தார் ஓபன் தொடரை வென்ற ரோகன் போபண்ணா ஜோடி!

ABOUT THE AUTHOR

...view details