உலகம் முழுவதும் கரோனா வைரஸின் அச்சுறுத்தலால் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், டென்னிஸ் விளையாட்டில் முக்கிய தொடராக கருதப்படும் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இந்தாண்டு மே மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா தாக்கம் காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, டென்னிஸ் தொடர்களின் தேதி மாற்றம் குறித்து தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘பிரஞ்சு ஓபன் ஒத்திவைக்கப்பட்டது குறித்து நிச்சயமாக வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது எனக்கு டென்னிஸ் கூட்டமைப்பிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. மின்னஞ்சலை பார்த்ததும் நான் ஓரிரு வீரர்களுடன் பேசினேன், ஆனால் அவர்கள் மிகவும் எரிச்சலடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.