துபாயில் நடைபெற்றுவரும் துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, பிரான்சின் கரோலின் கார்சியா இணை, சீனாவின் சைசாய் ஜெங்(Saisai Zheng) - செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா(Barbora Krejcikova) இணையை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சைசாய் இணை முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி சானியா இணைக்கு அதிர்ச்சியளித்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சைசாய் இணை, அந்த செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது.