உள்ளரங்கு விளையாட்டுத் தொடரான வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் நட்சத்திர வீரர் அண்ட்ரே ரூபெலேவ், இத்தாலியின் லோரென்சோ சோனெகோவை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டின் முதல் செட்டை ரூபெலேவ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூபெலேவ் 6-4 என்ற கணக்கில் அதனையும் கைப்பற்றி அசத்தினார்.