2019ஆம் ஆண்டிற்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 32ஆவது சுற்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டியும், அமெரிக்காவின் சோபியா கெனினும் மோதினர்.
விருவிருப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் ஆஷ்லே வென்றார். அதன்பின் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெனின், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.