தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#RolexParisMasters: முதல் சுற்றோடு வெளியேறினார் ரூபெலேவ்! - ஆண்ட்ரே ருப்லேவ் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றொடு வெளியேறினார்

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் வில்பிரைட் சோங்கா 4-6, 7-5, 6-4 என்ற செட்கணக்கில் ஆண்ட்ரே ருப்லேவை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

RolexParisMasters

By

Published : Oct 29, 2019, 12:38 PM IST

RolexParisMasters: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சு தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் இளம் நட்சத்திர வீரரான ஆண்ட்ரே ருப்லேவ் பிரான்சின் வில்பிரைட் சோங்காவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ருப்லேவ் 6-4 என கைப்பற்றி ஆசத்தினார். அதன் பின் ஆட்டத்தின் வெற்றியை மாற்றும் விதத்தில் இரண்டாவது செட் கணக்கை வில்பிரைட் 7-5 என கைப்பற்றி ருப்லேவிற்கு அதிர்ச்சியளித்தார்.

பின்னர், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை பிரான்சின் வில்பிரைட் சோங்கா 6-4 என கைப்பற்றி ஆண்ட்ரே ருப்லேவை வீழ்த்தினார். இதன் மூலம் ஆண்ட்ரே ருப்லேவ் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றொடு வெளியேறினார்.

இதற்கு முன்னதாக ரஷ்யாவின் ருப்லேவ் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவுள்ள பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சோங்கா, இத்தாலியின் நட்சத்திர வீரரான பெரெட்டினியை எதிர்கொள்கிறார்.

இதையும் படிங்க: #ViennaOpen: தனது முதல் வியன்னா ஓபன் பட்டத்தை வென்றார் தீம்!

ABOUT THE AUTHOR

...view details