தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரோஜர்ஸ் கோப்பை: இறுதிப் போட்டியில் நடால், மெட்வதேவ்! - fina;

மான்ட்ரியல்: அரையிறுதியின் ஒரு போட்டியில் மான்ஃபில்ஸ் விலகியதால் ரஃபேல் நடால் நேரடியாகவும், மற்றொரு ஆட்டத்தில் ரஷ்யாவின் மெட்வதேவ் வெற்றிபெற்றும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.

rogers cup final

By

Published : Aug 11, 2019, 9:34 AM IST

Updated : Aug 11, 2019, 1:34 PM IST

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடாலும் ஃபிரான்ஸ் நாட்டின் மான்ஃபில்ஸும் மோதவிருந்தனர்.

ஆனால் காயம் காரணமாக மான்ஃபில்ஸ் போட்டியிலிருந்து விலகியதால் ரஃபேல் நடால் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு அவர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டேனியல் மெட்வதேவ்

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த டேனியல் மெட்வதேவ் சக நாட்டு வீரரான கரேன் கச்சனோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் மெட்வதேவ் 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ரஃபேல் நடால்

இதன் மூலம் நாளை நடக்கவுள்ள ரோஜர்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் நடாலை, மெட்வதேவ் எதிர்கொள்கிறார்.

Last Updated : Aug 11, 2019, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details