தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 9, 2019, 10:47 AM IST

Updated : Aug 9, 2019, 12:42 PM IST

ETV Bharat / sports

ரோஜர்ஸ் கோப்பை: காலிறுதிச் சுற்றுக்கு போபண்ணா,  ஷாபோலோவ் இணை தகுதி

மாண்ட்ரீல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, கனடாவின் ஷாபோலோவ் இணை காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.

bopanna

கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவு 16ஆவது சுற்றில், இந்தியாவின் ரோகன் போபண்ணாவும் கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ் இணை, பிரிட்டனின் கெய்ல் எட்முண்ட், டைய்லர் ஃபிரிட்ஸ் இணையை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய போபண்ணா இணை முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றது. அதன்பின் போராடிய எட்முண்ட், டைலர் இணை 4-6 என்ற செட் கணக்கில் இரண்டாவது செட்டையும் பறிகொடுத்தது.

இதன் மூலம் 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் பிரிட்டனின் எட்முண்ட், டைலர் இணையை வீழ்த்தி போபண்ணா, ஷாபோலோவ் இணை வெற்றி பெற்றது. இதன் மூலம் போபண்ணா இணை ரோஜர்ஸ் கோப்பை காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நாளை நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் போபண்ணா - ஷாபோலோவ் இணை, சுவிச்சர்லாந்தின் வௌரிங்கா - பெனாய்ட் பைர் இணையை எதிர்கொள்கிறது.

Last Updated : Aug 9, 2019, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details