தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மியாமி ஓபன் டென்னிஸ்: மூன்றாம் சுற்றில் ரோஜர் ஃபெடரர்! - டென்னிஸ்

ஃபுளோரிடா: மியாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றில் சுவிட்ஸர்லாந்து நாட்டின் நட்சத்திர வீரர் ஃபெடரர், மால்டோவா வீரர் ரது ஆல்போட்டை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மூன்றாம் சுற்றில் ரோஜர் ஃபெடரர்

By

Published : Mar 24, 2019, 5:01 PM IST

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் மியாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றுப் போட்டியில், சுவிட்ஸர்லாந்து நாட்டின் நட்சத்திர வீரர் ஃபெடரர், மால்டோவாவை சேர்ந்த ரது ஆல்போட் (Radu Albot) உடன் மோதினார்.

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் ஃபெடரர் 4-6 என்ற கணக்கில் ஆல்போட்டிடம் தோல்வியை தழுவினார். பின்னர் ஆட்டத்தில் எழுச்சியைக் கண்ட ஃபெடரர், இரண்டாம் செட்டில் 7-5 என்ற கணக்கில் ஆல்போட்டை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் பரபரப்பான மூன்றாவது செட்டில், ஃபெடரர் தனது அனுபவமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதன் பலனாக அந்த செட்டை அவர் 6-3 என்ற வித்தியாசத்தில் எளிதில் கைப்பற்றினார். இதன் மூலம், ஃபெடரர் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடரந்து, நாளை நடைபெறவுள்ள மூன்றாம் சுற்றில், அவர் செர்பிய வீரர் ஃபிலிப் க்ரஜினோவிக்-கை (Filip Krajinovic) சந்திக்க வுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details