கரோனா வைரஸால் கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு சர்வதேச டென்னிஸ் தொடர் போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் தரவரிசை பட்டியலில் இருக்கும் வீரர்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பெருந்தொற்றால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு உதவி செய்ய ரோஜர் ஃபெடரர் போன்ற முன்னணி வீரர்கள் யாரும் முன்வரவில்லை என ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூவ் ஹாரிஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "டென்னிஸ் போட்டியில் பரிசுத் தொகையில் உள்ள முரண்பாடுகள், அதனை விநியோகிப்பது குறித்து பொது மக்களுக்கு எதுவும் தெரியாது. மேலும், முன்னணி வீரர்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்காமல் தொடர்களில் பங்கேற்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
அவ்வாறு செய்யாததால் என்னைப் போன்ற தரவரிசை பட்டியலில் பின்தங்கி இருக்கும் வீரர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே தரவரிசை பட்டியலில் 100 ஆவது இடத்திலுள்ள வீரர்களுக்கும் உதவும் வகையில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் செயல்பட வேண்டும். குறிப்பாக தரவரிசைப் பட்டியலில் 300ஆவது இடத்தில் இருக்கும் வீரருக்கும் வருமானம் ஈட்டுவதற்கு ஒரு அமைப்பு எங்களுக்கு தேவை என நான் நினைக்கிறேன்.