லண்டனில் ஆடவருக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜோர்ன் போர்க் குரூப்பில் இடம்பெற்றுள்ள உலகின் முன்னணி வீரரான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்டார்.
ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் டொமினிக் தீமிடன் தோல்வியைத் தழுவிய ஃபெடரர், இந்தப் போட்டியில் தனது இயல்பான ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.