டென்னிஸ் போட்டிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் தொடரில் குவாலிஃபயர் சுற்றுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டென்னிஸ் கிங் ரோஜர் ஃபெடரர், விம்பிள்டன் தொடரில் இதுவரை 12 முறை பங்கேற்று 8 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். அதேபோல் இந்த 12 தொடர்களில் 95 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.
விம்பிள்டன் தொடரில் சாதனைகளை தகர்க்கக் காத்திருக்கும் டென்னிஸின் கிங்! - roger-federer-chasing-historic-100th-win-at-wimbledon
2019ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் தொடரில் பல சாதனைகளை 'டென்னிஸ் கிங்' ரோஜர் ஃபெடரர் தகர்ப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விம்பிள்டன் தொடரில் ஃபெடரர் அரையுறுதி சுற்றுக்கு முன்னேறுவதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் நூறு வெற்றிகளைப் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அதேபோல் புல்தரைப் போட்டிகளில் இதுவரை 26 புல்தரை தொடர்களில் ஆடியுள்ள ஃபெடரர், 181 வெற்றிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
முதலிடத்தில் அமெரிக்க முன்னாள் வீரர் கிம்மி கான்னர்ஸ் 185 வெற்றிகளுடன் உள்ளார். இந்த தொடரில் அதனையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் லாய்டு ஹாரிஸை எதிர்த்து ஃபெடரர் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.