ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டுவருகிறது. அடுத்த ஆண்டிற்கான இத்தொடரானது ஜனவரி 20ஆம் தேதி மெல்போர்னின் பார்கில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பானது வீரர்களை ஊக்கமளிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 33 சதவிகிதம் உயர்த்தி இத்தொடரை அடுத்த ஆண்டு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இயக்குநர் கிரேக் டைலி கூறுகையில், "2010ஆம் ஆண்டு இத்தொடரில் வெற்றிபெற்ற ஆடவர், மகளிர் பிரிவு வெற்றியாளர்களின் பரிசுத் தொகை 4.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக இருந்தது. இதனை தற்போது 25 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக மாற்றியமைத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.