தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் உற்சாகத்திற்காக தயாராகும் நடால்! - நீண்ட நாள் காதலியான மரியா பிரான்சிஸ்கா பெரெல்லோவை

பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன் தனது நீண்ட நாள் காதலியான மரியா பிரான்சிஸ்கா பெரெல்லோவை திருமணம் முடித்துள்ளார் நடால்.

rafeal nadal

By

Published : Oct 30, 2019, 5:08 PM IST

ஃபிரான்ஸ் தலைநகரான பாரிசில் நடைபெற்றுவரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது யூ.எஸ். ஓபன் பட்டத்திற்குப் பிறகு பங்கேற்கிறார்.

33 வயதான ரஃபேல் நடால் கடந்த 19ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மரியா பிரான்சிஸ்கா பெரெல்லோவை திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது பாரிஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடருக்கு தனது மனைவியுடன் சென்றுள்ளார்.

தனது மனைவி மரியா பிரான்சிஸ்காவுடன் நடால்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் இந்தப் பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்றால் இந்தாண்டிற்கான நம்பர் ஒன் டென்னிஸ் வீரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடால் தனது அடுத்த உற்சாகத்திற்காகவும் தயாராகிவருகிறார்.

இதையும் படிங்க: மீண்டும் அணிக்கு கேப்டனான தினேஷ் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details