டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் நன்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், பப்லோ கரெனோ,மார்செல் கிரானோலர்ஸ் அடங்கிய அணி, அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன்,கைடோ பெல்லா, லியோனார்டோ மேயர் அடங்கிய அணியை எதிர்கொண்டது.
முதல் போட்டியில் ஸ்பெயினின் நாடால், அர்ஜெண்டினாவின் டியாகோவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரஃபேல் நடால் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டியாகோவை வீழ்த்தி, ஸ்பெயின் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்று தந்தார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினின் கரெனோ, அர்ஜெண்டினாவின் கைடோ பெல்லாவை எதிர்த்து மோதினார். இந்த போட்டியில் அர்ஜெண்டினாவின் பெல்லா 6-7, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் கரெனோவை வீழ்த்தி, அர்ஜெண்டினா அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்து ஆட்டத்தை 1-1 என சமநிலைப் படுத்தினார்.