ஆண்களுக்காக நடத்தப்படும் டென்னிஸ் லேவர் கோப்பை தொடர் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு அணியாகவும், பிற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றொரு அணியாகவும் களமிறங்குகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜெனிவாவில் தொடங்கியது.
டென்னிஸ்: காயத்தால் நடால் விலகல் - Rafael Nadal out of laver cup tennis
உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் காயம் காரணமாக லேவர் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதில் ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், நிக் கிர்கியோஸ் போன்ற முன்னணி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஸ்பெயினின் ரஃபேல் நடால், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் இந்த தொடரில் பங்கேற்க முடியாதது வருத்தமளிப்பதாகவும், எனினும் ஐரோப்பிய அணிக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்த பதிவையடுத்து, ஐரோப்பிய அணியின் கேப்டன் ஜோர்ன் பார்க், ஒற்றையர் பிரிவு போட்டிக்கு ஜெர்மனியின் டோம்னிக் தீயமையும், இரட்டையர் பிரிவு போட்டிக்கு கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸையும் மாற்று வீரராக அறிவித்தார். எனினும் இரண்டு பிரிவிலும் நடைபெறவிருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.