தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வயிறுவலி காரணமாக தொடரிலிருந்து விலகினார் நடால் - ரசிகர்கள் அதிர்ச்சி! - ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிச்சுற்றில்

பாரிஸ்: வயிறுவலி காரணமாக மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் முன்னணி நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் விலகியுள்ளார்.

injury to withdrawal from Paris Masters

By

Published : Nov 2, 2019, 11:29 PM IST

மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஃபிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறவிருந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிச்சுற்றில் உலகின் முன்னணி நட்சத்திர வீரரான ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், கனடா நாட்டின் டெனிஸ் ஷபோவாலோவை எதிர்கொள்ளவிருந்தார்.

ஆனால் நடால் தனக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் கனடாவின் ஷபோவாலோ போட்டியின்றி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் கனடாவின் இளம் நட்சத்திர வீரரான ஷபோவாலோ பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை எதிர்கொள்ளவுள்ளார்.

உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள நடால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’இவர மட்டும் ஏன் நீங்க டீம்ல சேத்துக்க மாட்டுகிறீங்க’ கொதித்தெழுந்த ஆர்ஜே பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details