தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

களிமண் முடிந்தது; அடுத்தாக புல்தரைதான் - நடாலின் அடுத்தத் திட்டம்! - French open 2019

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் தொடரின் கோப்பையை 12ஆவது முறையாக கைப்பற்றி சாதனைப் படைத்ததையடுத்து நட்சத்திர வீரர் நடால் அடுத்ததாக விம்பிள்டன் தொடரில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.

நடால்

By

Published : Jun 10, 2019, 11:53 AM IST

2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் கோப்பையை 12ஆவது முறையாக கைப்பற்றி சாதனைப் படைத்த களிமண் தரையின் அரசன் ரஃபேல் நடாலுக்கு இணையதளத்தில் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஃபேல் நடால், பிரெஞ்சு ஓபன் தொடர் மிகச்சிறந்த தொடராக அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் (டாமினிக் தீம்) இருவரும் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். இன்று நான் வெற்றிபெற்றுள்ளேன் என்றார். இதனையடுத்து ஜூலை மாதம் தொடங்கவுள்ள விம்பிள்டன் தொடரில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடால் - தீம்

2018ஆம் ஆண்டு களிமண் தரை தொடர்களுக்கு பிறகு விம்பிள்டன் தொடரில் பங்கேற்றேன். கடந்த எட்டு ஆண்டுகள் முன்னதாக தொடர்ந்து விளையாடியதுபோல் இப்போது விளையாட முடியாது. அதனால் எனது திட்டத்தின்படியே செயல்படவுள்ளேன்.

நடால்

புல்தரையில் ஆடுவதற்கு வழக்கம்போல் ஆவலாக உள்ளேன். விம்பிள்டன் தொடருக்கு தயாராவதற்காக எந்தப் போட்டியிலும் விளையாடப் போவதில்லை. கடந்த ஆண்டுகளைப் போலவே நேரடியாக விளையாடவுள்ளேன் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details